Saturday, December 27, 2008

நாம்

நாம் - என்ன ஒரு அருமையான தமிழ் சொல். நான் என்பதன் பொதுஉடைமை சொல். ஆம் நான் எனும் பொழுது அது சுயநலமாக இருக்கும் அதுவே நாம் எனும் பொழுது அது நம் அனைவரையும் குறிக்கும்.

நாம்
------
* இச்சொல் ஒற்றுமையும், ஒருமைப்பாட்டையும் குறிக்கும் ஓர் அருமையான தமிழ் சொல்.
* இச்சொல்லின் பெருமையை நம் தமிழ் இனத்தின் மூத்த தலைவர் திரு.மு.கருணாநிதி அவர்கள் "நாம் என்று சொல்லும் போது தான் நம் உதடுகள் குட ஓட்டும்" என்று மிகைபடுத்துகிறார்.

நாம் என்று சொல்லும் போது நமது ஒற்றுமையும், பலமும் அதிகமாகிறது. இச்சொல்லை சொல்லும் பொழுது நம் நாடு, நம் இனம், நம் மக்கள், நம் மொழி என்னும் உணர்வு நம்முள் கிளர்ந்து எழுகிறது.

எனவே உரக்க சொல்லுவோம் நாம் என்று.

வணக்கம்.